தற்போதுள்ள விஞ்ஞான உலகில் ஊடகமானது பல வகையிலும் மக்களுக்குப் பலவிதச் செய்திகளை உடனுக்குடன் வழங்குகின்றது எனலாம். உலகிலேயே மக்களை அதிகம் பாதுகாக்கும் துறைகளாக நான்கு துறைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
1) வைத்தியத்துறை
2) நீதித்துறை
3) பாதுகாப்புத்துறை
4) ஊடகம்
நான்கும் ஒரு நாட்டில் என்நேரமும் மக்களுக்கு முதலில் உதவும் துறைகளாக உள்ளன. அதிலும் ஊடகமானது மக்களுக்கு அனைத்து விதத்திலும் உதவுகின்றது.
சுனாமியின் தாக்கங்கள்ரூபவ் ஜஸ்லாந்தின் எரிமலை வெடிப்புரூபவ் இந்திய விமான விபத்து ஆகிய தகவல்களை நமக்குத் தந்ததும் இந்த ஊடகங்களேயாகும். அது மட்டுமல்ல நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும் போது அனைத்து ஊடகங்களும் இரவு பகல் பாராமல் மக்களுக்குத் தேர்தல் முடிவுகளை அறியத் தருவதும் குறிப்பிடத்தக்க சேவையாகும்.
ஊடகம் எனும் போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குவது பத்திரிகை வானொலி தொலைக்காட்சி ஆகியவையே ஆகும். ஊடகம் எனும் போது அதில் நிருபர்ரூபவ் ஊடகவியலாளர்ரூபவ் அறிவிப்பாளர் எனப் பலர் இருப்பர். இத் துறையில் இருப்பவர்கள் பல விடயங்களை அறிந்து தெரிந்து இருக்க வேண்டும். நாம் ஊடகத்திற்கு இன்று மட்டுமல்லாது என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும். இது நமது கடமையாகும்!












0 comments:
கருத்துரையிடுக