
ஊடகவியலாளர்கள் சமூகத்தை அறிவூட்டுவது கடமையாகும்
ஊடகவியலாளர் தொழில் வாண்மை,ஒழுக்க நெறி மற்றும்
துணிச்சல் ஆகியன அவர்கள் பணிபுரியும் ஊடக கலாச்சாரத்திற்கு
அமையவே தீர்மானிக்கபடுகிறது இன ரீதியாகவும் அரசியல்
ரீதியாகவும் மயப்படுத்தப்பட்ட சமூகத்தில் இலங்கையில் உள்ள
ஊடகவியலாளர்கள் வாழ்கின்றனர்.
அனைவருக்கும் பணியாற்ற கூடிய வகையில் ஊடக துறையின்
பெறுமானங்களை மேம்படுத்தி பொது மக்களுக்கு சேவையாற்ற
கூடிய பெறுமானங்களை தன்னகத்தே உடைய ஊடகத்துறையை
தோற்றுவிப்பதே ஊடகவியலாளனின் கடமையாகும்.
ஊடகவியலாளர் சமூக பணியை மேற்கொள்வது மிக கடினமான
விடையமாகும் இப்பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமையின்
இதனோடு தொடர்புடைய முக்கிய தொழில் வாண்மை பெறுமானங்கள்
பெற வேண்டும் அதாவது தகவலை பெற்றுக்கொள்ள வேண்டும் அது
சரியாக இருக்கின்றதா என்பதனை உரிதிப்படுதிக்கொள்ள வேண்டும்
உண்மையை நேர்மையுடன் தெரிவிக்க வேண்டும்.
தனியாகவும் நடுநிலமையாகவும் செயற்படுதல் வேண்டும் குறிப்பிட்ட
சம்பவத்தின் சகல பக்கங்களையும் கண்டறிய வேண்டும் எமது
சம்பவங்களுடன் தொடர்புடைய விடயங்களை திரட்டுவதற்கு
நேர்மையான வழிகளை பின்பற்ற வேண்டும் பிழைகளை திருத்த
வேண்டும் வதந்திகளை வெளியிடாமல் இருக்க வேண்டும்
ஆகக்குறைந்தது இரண்டு மூலங்களிலாவது தகவலை பெற்று வழங்குதல்
வேண்டும் இரகசியமாக வழங்கப்பட்ட தகவலை மதித்தல் வேண்டும்
என்பன தொழில் வாண்மை பெறுமானங்களில் அடங்கும்.
சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளை ஊடகங்கள் மூலமாக
வெளிப்படுத்த வேண்டும் மேலும் ஊடகங்கள் மூலமாக அவர்களது
குரல்கள் ஒலிக்கபட வேண்டும் சமூகத்தின் மதிப்பு பொறுமை புரிந்துணர்வு
போன்றனவும் அவசியமாகவும் சமூகத்தின் பல்லினத்தன்மை வேற்றுமைகள்
மனித உரிமைகள் போன்ற கொள்கைகளை மதித்து செய்திகளை வெளியிட
வேண்டும் ஊடகவியலாளர்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுத்த
வேண்டும் சமூகத்தில் மக்களது பிரச்சனைகளை அவர்கள் இடத்திற்கே
சென்று கேட்டு தகவல்களை வழங்க வேண்டும் ஊடகவியலாளர் சமூகத்தின்
கண்களாக மதிக்கபடுகின்றனர் இதனாலேயே ஆகும்.